| பணிப்பாளர் (சமூர்த்தி) | ||
![]() |
பெயர் | திருமதி பி.எம்.சி.எச்.குமாரிஹாமி |
| தொ.பே | 066 2222051/0712763650 | |
| தொ.ந | 066 2224866 | |
| மி.அ | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | |
இலக்கு
"துறைகள், சமூக அமைப்புகள், நுண் நிதி நிறுவனங்கள் நிகர, தொழில் வல்லுநர்கள், அரசு, தனியார், பொது மற்றும் அரசியல் பிரிவுகளின் ஆதரவுடன் உள்ளூர் மற்றும் உலகமயமாக்கல் நிறுவனங்களின் பங்களிப்பால் வறுமையை ஒழித்து உற்பத்தி நிறைந்த நாட்டையும் மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுங்கள். (பொருளாதார, சமூக, அரசியல், உடல், மன, சட்ட மற்றும் சுற்றுச்சூழல்) துறையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் முரண்பாட்டைக் குறைப்பதற்காக பரோபகாரத்தின் வழியில் திறமையான, பயனுள்ள, விரைவான மற்றும் செழிப்பான தீர்வுகளை செயல்படுத்துதல்."
பிரிவின் முக்கிய பொறுப்புகள்
| 1 | நிவாரணங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு | சமுர்த்தி நிவாரணங்கள் | |
| 1 | சமுர்த்தி நிவாரண செயற்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் மேற்பார்வைச் செய்தல் மற்றும் பின்னூட்டல். | ||
| 2 | குறித்த திகதிக்கு நிவாரணங்கள் தொடர்பான அறிக்கைகளைத் தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வழங்குதல். | ||
| 3 | சமுர்த்தி நிவாரண நிதியினை வங்கியில் வைப்பிலிடல், செலவினங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வைச் செய்தல் மற்றும் பின்னூட்டல். | ||
| 4 | நிவாரண கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளை பரிசீலனைச் செய்தல் மற்றும் அறிக்கையிடல் | ||
| 5 |
சமுர்த்தி நிவாரண பயன்பெறுநர்களின் பெயர்ப்பட்டியலினை பிரேதச செயலாளர் பிரிவு மட்டத்தில் புதுப்பித்தல், பரிசீலனைச் செய்தல் மற்றும் மாவட்ட பெயர்ப்பட்டியலினை பிரதான காரியாலயத்திற்கு வழங்குதல் |
||
| 6 | வீட்டுத்திட்ட லொத்தர் வெற்றியாளர்களுக்கு பணத்தொகையினை வழங்குவதற்குரிய கருமங்கள் மற்றும் வீட்டு மனைகளை கட்டுமானங்கள் தொடர்பான பின்னூட்டல். | ||
| 7 | விசேடித்த வீட்டுமனை கட்டுமான நிகழ்ச்சி திட்டத்திற்கு அவசியமான தகவல்களை தலைமை அலுவலகத்திற்கு வழங்குதல் | ||
| 8 | விசேடித்த வீட்டுமனை கட்டுமான நிகழ்ச்சித்திட்டத்திற்கான பணத்தொகையினை பிரதேச செயலகத்திற்கு விடுவித்தல், கட்டுமானங்களை பரிசீலனைச் செய்தல் மற்றும் பின்னூட்டல். | ||
| சமூகப் பாதுகாப்பு | |||
| 1 | சமூக சமுர்த்தி பாதுகாப்பு விடயத்திற்குரிய ஆவணங்ளை பரிசீலனைச் செய்தல் மற்றும் வங்கிக் கணக்கு நடவடிக்கைளை மேற்கொள்ளல் | ||
| 2 | மீள்நிரப்பீடுச் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தினை ஏற்றுக்கொள்ளல், பரிசீலனைச் செய்தல் மற்றும் உடனடியாக பணம் செலுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வைச் செய்தல் | ||
| 3 | தலைமை அலுவலகத்திலிருந்து மீள்நிரப்பு நிதியினை உடனடியாக பெற்றுக்கொள்ளல் மற்றும் மாவட்ட சமூக பாதுகாப்பு வங்கிக் கணக்கில் போதுமான தொகையினைப் பேணுதல் | ||
| 4 | சிப்தொர புலமை பரிசீலுக்குரிய பெயர்ப்பட்டியலினை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் மாவட்டத்தின் பெயர்பட்டியலினை தயாரித்து புலமைப் பரிசீலுக்கான நிதியினை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் | ||
| 5 | புலமைப் பரிசீலினை பெற்ற பிள்ளைகள் தொடர்பாக பின்னுட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருத்தமான வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி சார்ந்து வழிநடாத்துதல் | ||
| 6 | மாதாந்த முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் கணக்கு அறிக்கைகளை மேற்பார்வைச் செய்தல் | ||
| 7 | முன்னேற்ற மீளாய்வுக் கூடத்தினை நடாத்துதல் | ||
| 8 | வருடாந்த இறுதியில் வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் | ||
| 9 | தகவல் மையத்திற்கு தகவல்களை உள்ளீடு செய்தல் தொடர்பாக மற்றும் ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வைச் செய்தல் | ||
| 10 | பணிப்பாளர் நாயகம், மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் உட்பட சகல நிர்வாக குழுவினால் வழங்கப்படும் சகல விசேடித்த பணிகளையும் நிறைவேற்றுதல் | ||
| 11 | பிரதேச செயலக பிரிவு ரீதியில் சமுர்த்தி நிவாரண செயற்பாடுகள் தொடர்பாக மேற்பார்வைச் செய்தல் மற்றும் பின்னூட்டல் | ||
| 12 | நிவாரணம் தொடர்பான அறிக்கைளை குறித்த திகதிக்கு தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வழங்குதல் | ||
| 2 | விற்பனை, வாழ்வாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் | விற்பனைப் பிரிவு | |
| 1 | சிறிய அளவில் விற்பனை நிலையங்களை ஸ்தாபித்தல் | ||
| 2 | சமுர்த்தி உணவகங்கள், விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை மேம்படுத்தல் மற்றும் விற்பனைச் சந்தையினை அபிவிருத்திச் செய்தல் | ||
| 3 | “சமுர்த்தி அபிமானி” விற்பனை காட்சியினை நடாத்துதல் | ||
| 4 | தொழில்முனைவோர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் | ||
| 5 | இணையத்தளத்தின் மூலம் பொருட்களை விற்பனைச் செய்தல் (Online marketing) | ||
| 6 | வியாபார சங்கங்களை நிறுவுதல் | ||
| 7 | வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான மொழித் திறன்களை வழங்குவதற்கானப் பயிற்சிப் பட்டறைளை நடாத்துதல் | ||
| 8 | சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானத்தை ஈட்டும் உற்பத்தியாளர்களின் உற்பத்தியிற்கான உற்பத்தி தர சான்றிதழினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் | ||
| வாழ்வாதார அபிவிருத்திப் பிரிவு | |||
| 1 | வாழ்வாதார அபிவிருத்தி கருத்திட்டங்கள் (விவசாய மையம், விலங்கு கட்டுப்பாடு, விற்பனை மையம்) | ||
| 2 | வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் | ||
| 3 | தொழில்முனைவோர் பயிற்சிப் பட்டறைகளை நடாத்துதல் | ||
| 4 | நேரடி நிதியின் மூலம் நடாத்தப்படும் கருத்திட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் (விவசாய மையம், விற்பனை, விலங்கு கட்டுப்பாடு, விற்பனை) | ||
| சமூக அபிவிருத்திப் பிரிவு | |||
| 1 | போதைப்பொருள் நிவாரணம், வீட்டுமனை முகாமைத்துவம் மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் ஆகிய நிகழ்ச்சித்திட்டங்கள் | ||
| 2 | ஆலோனை நிகழ்ச்சித்திட்டம் | ||
| 3 | சமுர்த்தி கெக்குலு சிறுவர் அமைப்பு தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் | ||
| 4 | சிறுவர் வாசிகசாலை ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் | ||
| 5 | சுகாதாரமான மலசலகூட வசதிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் | ||
| 6 | மக்களை வலுவூட்டும் நோக்கத்தில் சுற்றாடலினை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் | ||
| ஓய்வூதியப் பிரிவு | |||
| 1 | விதவைகள் மற்றும் ஆதரவற்றோரை பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல் | ||
| 2 | ஓய்வுப்பெற்ற மற்றும் இறந்த உத்தயோகத்தர்களின் ஆவணங்களை தயாரித்து (பி.செ.கா. உரித்தான) தலைமை அலுவலகத்திற்கு அனுப்புதல் | ||
| 3 | விதவைகள் மற்றும் ஆதரவற்றோரின் அங்கத்துவ நிதியினை கோரும் ஆவணங்களை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புதல் | ||
| 4 | ஒரு வாரம், இரு வாரம், மாதாந்தம், காலாண்டு மற்றும் வருடாந்த அறிக்கைளை தயார் செய்வதற்கான உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளல் | ||
| 5 | இணையத்தளம் மற்றும் வலைத்தளங்களை பரிசீலனைச் செய்து அதற்குரிய ஆவணங்களை பராமரித்தல் | ||
| 6 | மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தொடர்புப்படுகின்ற சகல கூட்டங்களுக்கான அறிக்கைகள் மற்றும் தகவல்ளை வழங்குதல் | ||
| 7 | பணிப்பாளர்களுடைய முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களுக்கு அவசியமான சகல அறிக்கைளையும் தயாரித்தல் | ||
| 3 | நிர்வாகப் பிரிவு | ஓய்வூதியப் பிரிவு | |
| 1 | விதவைகள் மற்றும் ஆதரவற்றோரை பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல் | ||
| 2 | ஓய்வுப்பெற்ற மற்றும் இறந்த உத்தயோகத்தர்களின் ஆவணங்களை தயாரித்து (பி.செ.கா. உரித்தான) தலைமை அலுவலகத்திற்கு அனுப்புதல் | ||
| 3 | விதவைகள் மற்றும் ஆதரவற்றோரின் அங்கத்துவ நிதியினை கோரும் ஆவணங்களை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புதல் | ||
| 4 | ஓய்வூதியத்திற்கு முந்தைய விடுப்பு மற்றும் ஓய்வூதிய கோரிக்கைகளை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புதல் | ||
| விசாரணைப் பிரிவு | |||
| 1 | மாவட்ட சமுர்த்தி காரியாலயத்திற்கு கிடைக்கப் பெறுகின்ற மனுக்கள் மற்றும் மேன்முறையீடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளல் | ||
| 2 | மாவட்ட பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் ஒழுக்காற்று ஆவணங்களுக்கான முதல்கட்ட விசாரணைகளை நடாத்துதல் | ||
| 3 | நிறுவனம் சார்ந்த நடவடிக்கைகள், வங்கிகள், காரியாலயங்கள் மற்றும் அபிவிருத்தி உத்தயோகத்தர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளல் | ||
| 4 | சமுர்த்தி வங்கி/மேற்பார்வை/சமூகப் பிரிவு | சமுர்த்தி வங்கிப் பிரிவு | |
| 1 | ஊழியர் கடன் தொடர்பான கடமைகளை நிறைவேற்றல் | ||
| 2 | சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச் சங்கங்களின் முன்னேற்றத்தினை விசாரணைச் செய்தல், மேற்பார்வைச் செய்தல் மற்றும் பிணக்குளை தீர்ப்பதற்காக தலையிடுதல் | ||
| 3 | வங்கி நடவடிக்கைகளுக்குரிய மேன்முறையீட்டினை பரிசீலனைச் செய்தல் | ||
| 4 | வங்கியிற்குரிய எழுதுவினைப் பொருட்களை பகிர்ந்தளித்தல் தொடர்பாக மேற்பார்வைச் செய்தல் | ||
| 5 | சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச் சங்கங்களின் காணி மற்றும் கட்டுமான பணிகள் தொடர்பாக மேற்பார்வைச் செய்தல் | ||
| 6 | நிவாரணங்களை பகிர்ந்தளித்தல் தொடர்பாக தலைமை காரியாலயத்தினால் அடிக்கடி கோரப்படும் அறிக்கைகளை வழங்குதல் | ||
| 7 | வங்கிகளின் கணினிமயமாக்கல் தொடர்பான பணிகளை பரிசீலனைச் செய்தல். | ||
| மேற்பார்வைப் பிரிவு | |||
| 1 | மாவட்டத்தின் சகல சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச் சங்கங்களின் நிலுவைகள் சமப்படுத்தல் மற்றும் தனி கணக்கு நிலுவைகள் சமப்படுத்தப்பட்டுள்ளனவா என உறுதிபடுத்தல் | ||
| 2 | சமுர்த்தி நிவாரண மற்றும் கட்டாய சேமிப்பு கணக்குகளுக்கு பண வைப்பு, அதற்குரிய முதலீடு மற்றும் வட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் | ||
| 3 | சமுர்த்தி வங்கிகள் மற்றும் வங்கிச் சங்கங்களை பரிசீலனைச் செய்தல் மற்றும் கையேடு குறிப்புகளை பரிசீலனைச் செய்து சமுர்த்தி வங்கி மற்றும் வங்கி சங்கங்களின் சரியான கையேடுகளை நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் | ||
| 4 | கணக்காய்வு வினவல்களுக்கு பதில் கூறல், பரிசீலனைச் செய்தல் மற்றும் அறிக்கையிடல் | ||
| சமூகப் பிரிவு | |||
| 1 | சமூக நிறுவனங்கள் மற்றும் பிராந்திய நிறுவனங்களை நிறுவுதல், ஆய்வினை நடாத்துதல் மற்றும் பதிவுச் செய்தல் | ||
| 2 | திவநெகும சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் | ||
| 3 | மாதாந்த பொது சபைக் கூட்டத்தினை நடாத்துதல், வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வைச் செய்தல் | ||
| 4 | வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக யப்பான் மொழிப் பயிற்சியினை வழங்குதல் மற்றும் மேற்பார்வைச் செய்தல் | ||
| 5 | பொருளாதார அமைப்புக்களை நிறுவுதல் மற்றும் அவற்றை பராமரித்தல் தொடர்பாக மேற்பார்வைச் செய்தல் | ||
| 6 | சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்களின் பிள்ளைகளின் விளையாட்டு திறன்களை கண்டறிந்து முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் | ||
| 7 | அருணலு கடன் திட்டம் தொடர்பாக அறிவூட்டல் மற்றும் கடன் வழங்குதல் தொடர்பாக அறிக்கை இடல் | ||
| 8 | மாவட்ட சமுர்த்தி குழுக் கூட்டத்தினை ஏற்பாடுச் செய்தல் மற்றும் வழிநடாத்துதல் | ||
| 9 | சிரமதான நிகழ்ச்சித்திட்டங்களை சமூக அமைப்பு மட்டத்தில் செயற்படுத்தல் | ||
| 10 | பிராந்திய நிறுவனங்களின் நிதியின் மூலம் முன்மொழியப்படும் கருத்திட்டங்களைச் செயற்படுத்துதல் | ||
| 11 | மே மாதம் 31 ஆம் திகதி கொடி நிகழ்ச்சித்திட்டத்தினை நடாத்துதல் | ||
| 12 | சிசுபல சமூக சேவையின் மூலம் புத்தகங்களை வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தினைச் செயற்படுத்துதல் | ||
| 13 | முன்பராய சிறுவர் போசணை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கு ஓர் கஞ்சிக் குவளை வீதம் வழங்குதல் | ||
| 14 | அருணலு வங்கி கணக்குப் பயிற்சியினை வழங்குதல் மற்றும் விடயம் சார்ந்து மக்களுக்கு அறிவூட்டல் | ||
| 15 | தலமை அலுவலகம் மற்றும் சமூக மேம்பாட்டு நிதியினால் வழங்கப்படுகின்ற ஒதுக்கீட்டு நிதியின் மூலம் கருத்திட்டங்களைச் செயற்படுத்துதல் மற்றும் பற்றுச்சீட்டுகளுக்குரிய பணத்தினை செலுத்துதல் | ||
| 16 | பிராந்திய நிறுவனங்கள் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்கு விரிவுரைகளுக்கான உதவியினை நல்குதல் | ||
| 5 | கணக்குப் பிரிவு | கணக்குப் பிரிவு | |
| 1 | EPF/ETF ற்கு உரிய சகல கடமைகளும் | ||
| 2 | வருடாந்த பொருட்கள் ஆய்வு நடவடிக்கைககள் | ||
| 3 | மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தின் எழுதுவினைப்பொருட்களை கட்டுப்படுத்தல் | ||
| 4 | மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தின் சிறாப்பர் (சரப்) நடவடிக்கைககள் | ||
| 5 | கணக்குப் பிரிவின் நாளாந்த தபால் நடவடிக்கைககள் | ||
| 6 | முற்பணக் கொடுப்பனவுக்குரிய பீ கணக்கு நடவடிக்கைககள் | ||
| 7 | ஊழியர் வேதனக் கொடுப்பனவுகள் செலுத்துதல் தொடர்பான நடவடிக்கைககள் | ||
| 8 | Aபணக் கொடுப்பனவுகள் செலுத்தும் நடவடிக்கைககளுக்குரிய உறுதுச்சீட்டினை (வவுச்சர்) தயாரித்தல் முதல் பணக் கொடுப்பனவுகள் செலுத்தும செயற்பாட்டிற்குரிய சகல கடமைகளும் | ||
| 9 | பிரதேச செயலகங்களுக்கு நிதி மற்றும் கட்டுநிதி வழங்குவதற்குரிய சகல கடமைகளும் | ||
| 10 | வேதனத்தை தயாரித்தல் தொடர்பான சகல கடமைகளும் | ||
| 11 | கணக்குப் பிரிவிற்குரிய சகல மாதாந்த மற்றும் வருடாந்த அறிக்கைகளை பிரதான காரியாலயத்திற்கு வழங்குதல் | ||
| 12 | திட்டமிடல் நடவடிக்கைககள் | ||
| 6 | கணக்காய்வுப் பிரிவு | கணக்காய்வுப் பிரிவு | |
| 1 | மாவட்டத்தின் சமூக சமுர்த்தி வங்கிகளின் இடைக்கால மற்றும் வருடாந்த கணக்காய்வினை நடாத்துதல் | ||
| 2 | மாவட்டத்தின் சமூக சமுர்த்தி வங்கி சங்கங்களின் இடைக்கால மற்றும் வருடாந்த கணக்காய்வினை நடாத்துதல் | ||
| 3 | மாவட்டத்தின் சமூக நிறுவனங்கள் மற்றும் பிராந்திய நிறுவனங்களின் கணக்காய்வினை நடாத்துதல் | ||
| 4 | மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களிலுள்ள சமுர்த்தி திணைக்களத்திற்கு உரித்தான நடவடிக்கைகள் தொடர்பான கணக்காய்வினை மேற்கொள்ளல் | ||
| 5 | வேறு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களிலுள்ள சமுர்த்தி திணைக்களத்திற்கு உரித்தான நடவடிக்கைகள் தொடர்பாக கணக்காய்வினை மேற்கொள்ளல் | ||
| 6 | மாவட்டத்தின் சகல சமூக சமுர்த்தி வங்கிகள், சமூக வங்கி சங்கங்கள், சமூக நிறுவனங்கள், பிராந்திய நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலுள்ள சமுர்த்தி திணைக்களத்திற்கு உரித்தான கடமைகளும் மற்றும் அது தொடர்பான விசேட கணக்காய்வுகளையும் மேற்கொள்ளல் | ||






